அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புதுச்சேரி அதிமுகவினர் வரவேற்பு.
அதிமுக கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயண் படுத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை புதுச்சேரி அதிமுகவினர் வரவேற்கும் வகையில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் வெற்றி கோஷங்கள் எழுப்பியும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக கொடியையும், சின்னமும் எடப்பாடி தரப்பிற்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பி டீமான ஓபிஎஸ் தரப்பினர் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார்கள்.
திருச்சியில் அமைச்சர் ஏ.வ.வேலு தொடர்புடைய பைனான்சியர் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை
தற்போது நீதிமன்றத்திலும் ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக கொடியை, சின்னத்தை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால் அதிமுகவில் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்ற திமுக மற்றும் திமுக பி டீமின் சூழ்ச்சிகள் முறியடிக்கப் பட்டுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் புதுச்சேரியில் ஓபிஎஸ் நல விரும்பிகள் அதிமுக கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்தி வந்தார்கள் அவர்கள் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இனிமேலும் ஓபிஎஸ் தரப்பினர் கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது அப்படி பயன்படுத்தினால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அன்பழகன் தெரிவித்தார்.