போலீசார் ரோந்து சென்றபோது நாட்டு வெடிகுண்டை வீசி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கல்லூரி மாணவர் கைது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் மூசா (வயது 19). இவர் திண்டிவனத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த தீபாவளி அன்று நாட்டு வெடிகுண்டு தயாரித்து அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார் வாகனத்தை நோக்கி நாட்டு வெடிகுண்டு வீசினார். மேலும் அதை வீடியோவாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்த சிலர் கோட்டக்குப்பம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கல்லூரி மாணவனை அழைத்து விசாரணை செய்ததில் ஊரில் பெரிய கெத்தாக வேண்டுமென இப்படிப்பட்ட செயலை ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
வெவ்வேறு மொழிபேசும் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்: கோவையில் பொங்கல் விழா கோலாகலம்
இதனை அடுத்து மூசா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக நாட்டு வெடிகுண்டை தயார் செய்து ரோந்து சென்ற போலீசார் வாகனம் அருகே வீசி அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.