பஞ்சுமிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

By Ramya s  |  First Published Feb 8, 2024, 12:03 PM IST

புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்ககூடிய ரசாயணம் கலக்கப்படுவதை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு துறை அதை தடை செய்துள்ளது.


புதுச்சேரி கடற்கரை சாலை மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்ககூடிய ரசாயணம் கலக்கப்படுவதை கண்டுபிடித்த உணவு பாதுகாப்பு துறை அதை தடை செய்துள்ளது. புதுச்சேரி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் வட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் விஷ தன்மை கொண்ட ரசாயணம் இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை வாங்கி சோதனை செய்தனர். 

அதில் ரோடமின் பி என்ற விஷ நிறமி இருப்பது கண்டறியப்பட்டது. இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். குறைந்த விலைக்கு கிடைப்பதால் இதனை வடமாநில இளைஞர்கள் வாங்கி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வருகின்றனர்.

Latest Videos

undefined

3 நிறுவனங்களில் 2 சென்னையில் தானே உள்ளது.!ஏன் ஸ்பெயின் சென்று ஒப்பந்தம் போட்டீர்கள்.? கேள்வி கேட்கும் எடப்பாடி

இதனை கண்டறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் இந்த பஞ்சுமிட்டாயை விற்பனை  செய்த வடமாநில இளைஞர்களை பிடித்து அதிகாரிகள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசு...கிண்டல் செய்து பொதுமக்களிடம் அல்வா கொடுத்த திமுகவின் தரமான சம்பவம்

புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருவது தெரியந்ததை தொடர்ந்து அவர்களுடைய விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் அனுமதி அளித்துள்ள செயற்கை நிறமியை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறையினர் பஞ்சுமிட்டாய் விற்பனையாளர்களுக்கு தெரிவித்தனர். இதனிடையே இதுகுறிறித்து வழக்கு பதிவு செய்த தன்வந்திரி போலீசார் பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

click me!