புதுவையில் 10ம் வகுப்பு தேர்வில் 89.12% தேர்ச்சி! - முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் கூட்டாக பேட்டி!

By Dinesh TG  |  First Published May 19, 2023, 1:56 PM IST

புதுவையிலும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 89.12% என்றும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.92% என்றும் முதல்வர் ரங்கசாமி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவிதுள்ளார்.
 


புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 89.12 % ம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 78.92% என தெரிவித்த அவர்கள் வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

10 வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 7,797 மாணவர்களும், 7,618 மாணவிகளும் என 15,415 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். இதில் 13,738 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர் என தெரிவித்தனர். புதுச்சேரி மாநிலத்தில் 7 பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளது என்றும் தெரிவித்தனர்.



மேலும புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 127 பள்ளிகளுக்கு அனுமதி கேட்டதில் 116 அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் துவங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தனைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் படி கல்வி கற்பிக்க பயிற்சி எடுத்து வருகின்றனர் என நமச்சிவாயம் தெரிவித்தர்.

Latest Videos

click me!