அண்ணன் திருமாவளவனுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர் யூசுப்.. தமிமுன் அன்சாரி உருக்கம்.

Published : May 15, 2021, 11:00 AM ISTUpdated : May 15, 2021, 11:10 AM IST
அண்ணன் திருமாவளவனுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர் யூசுப்.. தமிமுன் அன்சாரி உருக்கம்.

சுருக்கம்

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் அக்கட்சியின் பொருளாளர் யூசுப் என அவரது மறைவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் அக்கட்சியின் பொருளாளர் யூசுப் என அவரது மறைவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் அருமை சகோதரர் முகம்மது யூசுப், கொரோனா தொற்றால் மரணித்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறோம். 

அவர், கடந்த 20 ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு அண்ணன், திருமாவளவன், அவர்களுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். இன்முகத்துடன் பழகி சகல தரப்பினரிடமும் நட்புறவு பாராட்டிய  சிறந்த செயல்பாட்டாளர், தனது நடுத்தர வயதில் நம்மிடமிருந்து விடைபெற்று சென்றிருக்கிறார். பாழாய் போன கொரோனா தொற்று அன்றாடம் ஆயிரமாயிரம் உயிர்களை அள்ளி செல்கிறது.

இதில் நமது எத்தனையோ உறவுகளும், நட்புகளும், பறிபோகிறார்கள் அதில் சகோதரர் முகம்மது யூசுப்பும், ஒருவராகியிருக்கிறார் என்பது சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது பிழைகளை இறைவன் மன்னித்து மறுஉலக வாழ்வில் உயரிய சுவர்க்கம் கிடைத்திட பிரார்த்திக்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர்களுக்கும்,  மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!