ரேஷன் கடைகளில் 2000 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கியது.. சொன்னதை செய்துகாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்.

Published : May 15, 2021, 10:44 AM IST
ரேஷன் கடைகளில் 2000 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடங்கியது.. சொன்னதை செய்துகாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்.

சுருக்கம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் தொடங்கியது. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் ரொக்கம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கும் திட்டம் ரேஷன் கடைகளில் தொடங்கியது. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் ரொக்கம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அதற்கான ரொக்கம் மறைந்த தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி வழங்கப்படும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

அதேபோல அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக அரியணை ஏறி உள்ளார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இந்நிலையில் கொரோனா உச்சத்தை அடைந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி நெருக்கடி காரணமாக நான்காயிரம் வழங்குவதற்கு மாற்றாக முதல் தவணையாக இரண்டாயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அதற்கான திட்டத்தை முறையாக தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் நிதி வழங்கப்பட்டு வருகிறது.  

 

கடந்த 4 நாட்களாக அரிசி அட்டைதாரர்களுக்கு பணத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டது, அதில் எப்பொழுது பணம் வழங்கப்படுமென நேரம் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது, அதனடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 2000 ரூபாய் வினியோகிக்கப்பதற்கான திட்டம் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அதிக கூட்டம் சேர்க்க கூடாது என்பதால்,  நாளொன்றுக்கு 200 பேருக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரத்து 950 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது. டோக்கன் பெறாதவர்கள், அல்லது குறிப்பிட்ட தேதியில் சென்று வாங்க இயலாதவர்கள், வருகிற 18-ஆம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணத்தை வாங்க பொதுமக்கள் அவசரப்பட தேவையில்லை என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!