திமுக அரசை பாராட்டுவது எங்களுக்கு போதாது... அதிமுகவுக்கு புத்தி புகட்டும் சீண்டும் அன்பில் மகேஷ்..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2021, 10:27 AM IST
Highlights

மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆல்பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து அரசை பாராட்டுவர். 

இன்றைய சூழலில் 12 ஆம் வகுப்பு தேர்வு என்பது கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழக அரசு 12 ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்தது. இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், திருச்சி வரகனேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி போகுமே தவிர ரத்து செய்யப்படமாட்டாது.  ஆல்பாஸ் என்பதை விட மாணவர்களின் எதிர்கால நலனே முக்கியம். இன்றைய சூழலில் தேர்வு கட்டாயம்; மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆல்பாஸ் என அறிவித்தால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்து அரசை பாராட்டுவர். ஆனால், அது எங்களுக்குத் தேவையில்லை” என்றார்.

click me!