தேர்தல் வந்தால் தான் எங்கள் ஞாபகம் வருமா? எம்.பி. ஜோதிமணியை வறுத்தெடுத்த நபரால் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Aug 17, 2023, 10:51 AM IST

கரூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.ஜோதிமணியிடம் தேர்தல் வந்தால்தான் எங்கள் ஞாபகம் வருமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நபரால் பரபரப்பு.


நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் அரசியல் பிரமுகர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூக்கணாங்குறிச்சி கந்தசாரப்பட்டி பகுதி கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஜோதிமணியிடம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தேர்தல் நேரம் வரும் போது மட்டுமே எங்களை உங்களுக்கு ஞாபகம் வருமா? வாக்கு கேட்க மட்டுமே வருகின்றீர்கள். அதன் பின்னர் இந்த பகுதியில் உங்களை பார்க்கவே இல்லை. குறிப்பாக நன்றி கூற கூட வரவில்லை என்று காட்டமாக அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். உடனடியாக எம்பி ஜோதிமணி தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதியில் நன்றி தெரிவித்து வருகிறேன். நீங்கள் வேண்டுமென்று என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வந்தது போல் தெரிகிறது என கேள்வி கேட்ட நபரிடம் எம்பி ஜோதிமணி ஆவேசமாக பேசினார்.

ஜெயங்கொண்டத்தில் சாமி ஊர்வலத்தில் மோதல்; 5 பேர் அதிரடி கைது

இந்த நிலையில் எதையும் கண்டு கொள்ளாத அந்த நபர் தொடர்ந்து வாக்கு சேகரிக்க மட்டும் தான் வருகிறீர்கள், ஃபோன் செய்தால் ஒரு முறையாவது எடுத்து உள்ளீர்களா? எம்பி என்கின்ற முறையில் நாங்கள் யாரிடம் முறையிடுவது என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். கிராம சபை கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் சூழ்ந்ததால் சற்று பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எம் பி ஜோதி மணியிடம் சரமாரி கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

click me!