முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் அடுத்த பிரதமர்; திண்டுக்கல் ஐ லியோனி பேச்சு

By Velmurugan s  |  First Published Aug 17, 2023, 8:42 AM IST

2024 மக்களவைத் தேர்தலில் பஜகவுக்கு எதிரான கூட்டணிக்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக மு.க.ஸ்டாலின் தான் இருப்பார். அடுத்த தேர்தலில் ஸ்டாலின் கை காட்டும் நபர் தான் பிரதமர் என்று திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்துள்ளார்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் திமுகவினரால் தொடர்ந்து நலத்திட்டங்கள் வாயிலாகவும், விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வடசென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 

Tap to resize

Latest Videos

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுகல் லியோனி மேடையேறி பேசீனார். அப்போது அவர் பேசுகையில், பல அமைச்சர் சபாநாயகர் பதவியில் இருந்தவர் ஜெயக்குமார். 1989ல் நடந்தது தற்போது தொலைக்காட்சிகளில் விவாதம் ஆகியுள்ளது.

 

இறந்தவர்கள் தெய்வத்திற்கு சமம். இறந்த ஜெயலலிதாவிற்கு நானுமே இரங்கல் தெரிவித்துள்ளேன். தற்போது விவாதங்களாக மாறியுள்ள இந்த விஷயங்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. நிர்மலா சீதாராமனால் தான். எதிர்கட்சி கூட்டத்திற்கு சென்றுவிட்டு அத்தனை எதிர்கட்சி தலைவர்கள் இருக்கும்போது கர்நாடக முதல்வரிடம் தண்ணீர் கேட்பது சரியல்ல.

 

கொத்தடிமைக்கு என்பதற்கு பொருத்தமானவர்கள் அதிமுகவினர் தான். ஜெயலலிதா, சசிகலா, தினகரன் தற்போது பிரதமர் மோடி உட்பட அனைவருக்கும் அடிமையாக இருக்கும் அதிமுகவினர் தான் ஜால்ரா அடித்து ஆமாம் போடுகிறார்கள். தன்மானத்திற்கு ஓரே இலக்கணம் திமுக கட்சி தான். 

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என சுதந்திர தினத்தில் அறிவித்தவர் முதல்வர். பிரதமர் வாயிலேயே வடைசுடுவது வடஇந்தியாவில் வேண்டுமானாலும் நடைபெறலாம். பெரியார் மண்ணான தமிழகத்தில் அவையெல்லாம் எடுபடாது. மக்களை ஏமாற்றும் பொது சிவில் சட்டத்தை முதலில் எதிர்த்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் தான்.

 

முதன்முதலில் கலப்பு திருமணத்தை சட்டமாக்கியது கலைஞர். அவர்களுக்கு நிதிஉதவி அளித்தது முதல்வர் ஸ்டாலின். இந்தியா என்ற கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தமிழக முதல்வர் இருப்பார். 2024 தேர்தலில் முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவரே இந்தியாவின் பிரதமராக ஆவார் என்றார்.

click me!