அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையே போச்சு! ஓட்டேரி காவலரின் கதறல் நெஞ்சை உறைய வைக்கிறது! டிடிவி.தினகரன்.!

By vinoth kumar  |  First Published Aug 17, 2023, 7:36 AM IST

அரசு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை என அனுமதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுளால் கால் அகற்றும் நிலைக்குச் சென்றுள்ளது என்ற தந்தையின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.


கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணைக் குழுவை அமைத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- துட்சாதன நாடகத்தை அரங்கேற்றிய மூத்த அமைச்சர்! சாட்சிகளை தன்னுடன் வைத்துக்கொண்டு பொய் பேசலாமா? டிடிவி. கேள்வி.!

அரசு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை என அனுமதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுளால் கால் அகற்றும் நிலைக்குச் சென்றுள்ளது என்ற தந்தையின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணைக் குழுவை அமைத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இதையும் படிங்க;-  எழுதாத பேனாவிற்கு 90 கோடியில் சிலை வைக்க நிதி இருக்குது! மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லையா? டிடிவி.!

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருவதால், அரசு மருத்துவமனையின் சிகிச்சை தரம் குறித்து மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருவதை அரசு உணர வேண்டும். மக்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!