ஜெயிலர் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கி ரஜினி ரசிகர்களை மாநாட்டிற்கு அழைத்த கடம்பூர் ராஜூ

By Velmurugan s  |  First Published Aug 16, 2023, 9:34 PM IST

மதுரை மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை அழைத்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் ரஜினி ரசிகர்களுக்கு ஜெயிலர் திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினார். 


 

மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்னாள்  அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ஜெயிலர் திரைப்படத்தினை ரஜினி ரசிகர்கள் இலவசமாக பார்க்கும் வகையில் டிக்கெட் வழங்கினார்.

Tap to resize

Latest Videos

undefined

2 திரைகளில் ரஜினி ரசிகர்கள் பார்க்கும் வகையில் 500 ரசிகர்களுக்கு இலவச டிக்கெட்களை கடம்பூர் ராஜூ வழங்கினார். மேலும் மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை வரும்படி அழைப்பு விடுத்தார். இதில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடம்பூர் ராஜூ பேசுகையில், மதுரை மாநாடு உலக சரித்திர புகழ் வாய்ந்த மாநாடாக நடைபெற உள்ளது. 

அமைச்சரின் காலடியில் குழந்தையை வைத்து கோரிக்கை விடுத்த ஊழியர்; அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்

உலகத்திலேயே ஏழாவது பெரிய கட்சியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக உள்ளது. தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியின் அவலங்களையும், ஏமாற்றங்களையும் பார்த்து மக்களின் பார்வை அதிமுகவின் பக்கம் திரும்பி உள்ளது. அதிமுக மாநாட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களையும், பொது மக்களையும் அழைக்கும் வகையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தினை இலவசமாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆவினில் போலி சாதி சான்றிதழ் மூலம் பணிக்கு சேர்ந்த அதிமுகவினர்: நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ரசிகர்களும் ஆர்வமுடன் மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதிமுக மாநாட்டுக்கு எதிராக சிலர் ஒரு குறிப்பிட்ட சமூகம் பேரில் வால் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதிமுக அனைத்து மக்களுக்கான கட்சி.  அந்த குறிப்பிட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் தான் இன்றைக்கு மாநாட்டு பணிகளை முழுமையாக செய்து வருகின்றனர். இது போன்ற சலசலப்புக்கெல்லாம் அதிமுக அஞ்சாது என்றார்.

click me!