என் மரத்தின் கீழ் வளரும் குட்டை செடி நீ.. பாஜக, அண்ணாமலையை கிண்டல் அடித்த சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jun 3, 2022, 1:01 PM IST
Highlights

என் மரத்தின் கீழ் வளர்கிற குட்டை செடி நீ என்ன பாஜகவையும்,  அண்ணாமலையையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். 

என் மரத்தின் கீழ் வளர்கிற குட்டை செடி நீ என்ன பாஜகவையும்,  அண்ணாமலையையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். முடிந்தால் தேசிய கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் நாம் தமிழர் கட்சியுடன் தனித்து போட்டியிட தயாரா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சி தொடங்கியது முதலிருந்தே அனைத்து தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற முடிவில் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் கண்ட அக்காட்சி 30 லட்சம் வாக்குகளைப் பெற்றது, அதாவது அதிமுக திமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் பெரிய கட்சி என்ற நிலையை அக்காட்சி எட்டியுள்ளதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் திமுகவை எந்த அளவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து வருகிறரோ அதே அளவிற்கு  தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக வையும் வெளுத்து வாங்கி வருகிறார். ஆனால் நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் தான் என காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகள் முத்திரை குத்தி வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், சீமான் தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை  காட்டமாகவே முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு  திருச்சி விமான நிலையத்தில் மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கில் சீமான் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரமே இல்லை, எதிர்க்கட்சியாக இருந்தபோது நாங்கள் ஜனநாயகத்தின் காவலர்கள் என்றனர். ஆனால் சவுக்கு சங்கர், மாரிதாஸ், கார்த்திக் கோபிநாத் போன்றவர்கள் மீது வழக்குத் தொடுத்து இருக்கிறார்கள், சென்னையில் கடந்த 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது ஆனால் முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அருமையாக உள்ளதாக கூறுகிறார், கருத்தை கருத்தால் எதிர்கொள்வது தான் ஜனநாயகம், சவுக்கு சங்கர் ஒரு கருத்து சொல்கிறார் என்றால் நீங்கள் தான் அதிக சவுக்கு சங்கர் களை வைத்திருக்கிறீர்கள். அவர் கருத்துச் சொன்னால் அவருக்கு எதிராக நீங்கள் கருத்து சொல்லுங்கள் ஆனால் அதை விட்டு தூக்கி உள்ளே போட சொல்வது என்ன நியாயம்.

இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை, நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நோக்கம். என் பாதையில் நான் தெளிவாக இருக்கிறேன் என்றார். பேரறிவாளன் நிரபராதி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அப்படியென்றால்  அமித்ஷாவுக்கு மோடிக்கும் குஜராத் கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என இந்த நாட்டின் உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கொடுத்திருக்கிறதே அது எப்படி?  மோடி பிரதமராக வந்து 8 ஆண்டுகள் முடிந்து விட்டது, ஆனால் எங்களைப் போன்றே அவர் பத்திரிகையாளர்களை ஏன் சந்திக்க மறுக்கிறார். லஞ்ச ஊழலைப் பற்றி பாஜக பேசுகிறது, ரபேல் ஊழல், பணமதிப்பிழப்பு விவகாரங்களில் அவர் சாதித்தது என்ன? தீவிரவாதம் அடியோடு ஒழிந்து விட்டது என கூறுகிறார்கள். ஆனால் புல்வாமாவில் நடந்தது என்ன? இந்த நாட்டில் மருத்துவர்கள் காவலர்கள் என அனைத்துக்குமே தேர்வு எழுத வைத்து தான் எல்லோரையும் தேர்ந்தெடுக்கிறார்கள் ஆனால் மக்களை நிர்வகிக்கும் தலைவர்களுக்கு என்ன தேர்வு வைக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் தேர்வு எழுத சொல்லுகிற நீங்கள் ஏன் தேர்வு எழுதுகிறது இல்லை, முதலில் மோடி, அமித்ஷா, ஸ்டாலின் தேர்வு  எழுதட்டும் என்றார். தமிழகத்தில் பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என செய்தியாளர்கள் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த சீமான், அவரவர் விரும்பியபடி சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். நீங்க பெரிய வளர்ந்துக் கொண்டு இருக்கிற கம்பாதி கொம்பர்கள் தானே, 2024 தேர்தலில் ஒன்று ஸ்டாலின் பின்னாடி நிற்பீர்கள் இல்ல எடப்பாடி பின்னாடி நிற்பீர்கள், என மரத்துக்குக் கீழே என் நிழலில் வளர்கிற ' குட்டை செடி நீ ' , அப்புறம் எதுக்கு குதிக்கிற, முடிந்தால் என்னை போல் தனித்து போட்டியிடு பார்ப்போம்.  திமுக அதிமுக இரண்டு கட்சியும் விட்டுவிடுங்கள், காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் தனித்து போட்டியிடலாம். யார் முந்துகிறோம் என்று பார்க்கலாம். இவ்வாறு சீமான் கூறினார்.
 

click me!