மோடியுடன் நெருக்கம் ஏமாற்று வேலை.. 'கோ பேக் மோடி' இன்று 'கம் பேக் மோடியா'.? ஸ்டாலினை உலுக்கும் RB.உதயகுமார்

Published : Jul 30, 2022, 03:58 PM ISTUpdated : Jul 30, 2022, 04:06 PM IST
மோடியுடன் நெருக்கம் ஏமாற்று வேலை.. 'கோ பேக் மோடி'  இன்று 'கம் பேக் மோடியா'.? ஸ்டாலினை உலுக்கும் RB.உதயகுமார்

சுருக்கம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது "கோபேக் மோடி" என்று சொன்னவர்கள் இப்போது ஆளுங்கட்சியான பிறகு "கம்பேக் மோடி" என்று சொல்கிறார்கள் இது தான் திமுகவின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார். 

எதிர்க்கட்சியாக இருந்தபோது "கோபேக் மோடி" என்று சொன்னவர்கள் இப்போது ஆளுங்கட்சியான பிறகு "கம்பேக் மோடி" என்று சொல்கிறார்கள் இது தான் திமுகவின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மக்களை ஏமாற்றும் வகையில்தான் ஸ்டாலினின் செயல்பாடுகள் இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்,  அதன் வெளிப்பாடுதான் பிரதமருடன் ஸ்டாலின் நெருக்கம் பாராட்டுவது என்றும்  ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவினர் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை  அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அடிக்கடி ஆளுநரை சந்தித்து திமுக அரசின் மீது  புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் வருகை தந்த நிலையில், பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் இணக்கம் காட்டினார்.

இதையும் படியுங்கள்: ஸ்டாலினும் மோடியும் சிரித்து பேசினால் உடனே கூட்டணியா.?? அசால்ட் செய்த கனிமொழி

இந் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போது பிரதமர் மோடி நான் தொலைபேசியில் அழைத்ததை ஏற்று  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நான் நிச்சயம் வருகிறேன் என்று பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் எனவும் புகழாரம் சூட்டினார். பிரதமர் மோடியும், தமிழக பயணம் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம் கொடுத்தது என கூறியிருந்தார். மோடி ஸ்டாலின் இணக்கம் பாஜக திமுக கூட்டணிக்கு வழிவகுக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்: திமுக - பாஜக கூட்டணி ..? அப்படி நடக்க வாய்ப்பில்லை.. நெற்றியடி கொடுத்த ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா..?

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், பிரதமரிடம் ஸ்டாலின் காட்டிய இணக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகே யூனியன்  கிளப்பில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியை தொடங்கி வைத்தார் உதயகுமார் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியவர், அதிமுக அரசு ஆன்லைன் ரம்மியை ரத்து செய்தது,, ஆனால் நீதிமன்ற தீர்ப்பால் அது தொடர்கிறது. இதுவரை தமிழகத்தில்  23 பேர் அதனால் உயிரிழந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சும் ஓருக்கும் போது ஒரு பேச்சும் பேசுவதுதான் திமுகவின் வழக்கம். எதிர்க்கட்சியாக இருந்தபோது கோபேக் மோடி என்றவர்கள், இப்போது ஆளுங்கட்சியானவுடன் கம்பேக் மோடி என்று சொல்கிறார்கள். இதுதான் திமுகவின் நிலைப்பாடு, மக்களை ஏமாற்றும் வகையில்தான் ஸ்டாலின்  செயல்பட்டுகள் உள்ளது. பிரதமர் மோடியுடன் ஸ்டாலின் நெருக்கம் பாராட்டுவதும் ஒருவகையான ஏமாற்றுவேலைதான் என ஆர்.பி உதயகுமார் விமர்சித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!