ஸ்டாலினும் மோடியும் சிரித்து பேசினால் உடனே கூட்டணியா.?? அசால்ட் செய்த கனிமொழி

By Ezhilarasan Babu  |  First Published Jul 30, 2022, 3:18 PM IST

இது பிரதமர் மோடியை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, தமிழகத்தில் மேற்கொண்ட பயணம்  மறக்கமுடியாத மகிழ்ச்சியை தந்தது என்று பிரதமர் கூறியிருந்தார். இந்நிலையில் பாஜக திமுக விரைவில் கூட்டணி என்றும், அதற்காக இரண்டும் நெருங்கி வருகிறது எ


6. தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார், அதற்குள் கூட்டணி என்று  முடிச்சு போடுவது அர்த்தமற்றது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி- ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இணக்கம் காட்டிய நிலையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கனிமொழி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக, திமுக அரசு செய்து வரும் ஒவ்வொரு திட்டத்தையும் விமர்சித்து வருகிறது, கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் வரை ஒவ்வொருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். மொத்தத்தில் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும், திமுக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசு என்றும் பாஜகவினர்  விமர்சித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

இதேபோல் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த முறை பிரதமர் மோடி வருகை தந்தபோது மாநில சுயாட்சி, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரிகளை மேற்கோள் காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில முதலமைச்சர் பிரதமருக்கு உரிய மரியாதை தர வில்லை என்றும் பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில்தான் ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது மேடையில் உரையாற்றிய மு.க ஸ்டாலின் வழக்கத்துக்கு மாறாக பிரதமரை பாராட்டி புகழ்ந்து பேசினார். 

இதையும் படியுங்கள்:  திமுக - பாஜக கூட்டணி ..? அப்படி நடக்க வாய்ப்பில்லை.. நெற்றியடி கொடுத்த ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா..?

தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த போது பிரதமர் தொலைபேசியில் அழைத்து தன்னை நலம் விசாரித்தார் என்றும், எனது நிலைமையை புரிந்து கொண்டு கட்டாயம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என வாக்களித்தார் என்றும், அதேபோலவே  இன்று கலந்துகொண்டார், பிரதமர் மோடி பெருந்தன்மை மிக்கவர் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியியுடன் ஸ்டாலினும் அதிக  இணக்கம் காட்டினர். மேலும் மோடி சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது. அவருக்கு செஸ் போர்டை ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.

இது பிரதமர் மோடியை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, தமிழகத்தில் மேற்கொண்ட பயணம்  மறக்கமுடியாத மகிழ்ச்சியை தந்தது என்று பிரதமர் கூறியிருந்தார்

இந்நிலையில் பாஜக திமுக விரைவில் கூட்டணி என்றும், அதற்காக இரண்டும் நெருங்கி வருகிறது என்றும் பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர்,  நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் மத்திய அரசு தவறான நடவடிக்கையால் எம்பிக்களை நீக்கி உள்ளது என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!

எம்.பிக்கள் நீக்கப்பட்டது தவறான நடவடிக்கை என்றும் அவர் கூறினார். இதனால் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது, அதை நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்று கூறினார். பிரதமர் மோடியும்  ஸ்டாலினும் இணக்கம் காட்டுகிறார்களே , விரைவில் திமுக பாஜக கூட்டணியில் சேர போகிறதா? என செய்தியாளர்களின் கேள்விக்கு சிரித்தவாறு, தமிழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார், அதற்குள் பாஜகவுடன் கூட்டணி முடிச்சுப் போடுவது அர்த்தமற்றது என பதிலளித்தார். 
 

click me!