எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Jul 30, 2022, 1:16 PM IST
Highlights

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. வருகிற 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையர் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும்?  யார் கலந்து கொள்வார்கள்? என எதிர்பார்ப்பு எழுந்தது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுறை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் உச்சம் பெற்றுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பை அழைத்துள்ளது ஓபிஎஸ் தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!