ராஜினாமா செய்தார் "எடியூரப்பா"..! அரசியலில் புது திருப்பம்.!

Asianet News Tamil  
Published : May 19, 2018, 04:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ராஜினாமா செய்தார் "எடியூரப்பா"..!  அரசியலில் புது திருப்பம்.!

சுருக்கம்

yediyoorappa resigned his cm post

கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினமா...

பரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை கர்னாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை  நிரூபிக்கும் நிலையில் இருந்தது  பாஜக

இந்நிலையில் தற்போது நான்கு மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என  எதிர்பார்த்த நிலையில், முதல்வர் எடியூரப்பா தன்னுடடைய உரையை நிகழ்த்திவிட்டு , பதவியை ராஜினமா செய்து விட்டார். பதவியேற்ற 56 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினமா செய்தார் எடியூரப்பா

பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா

மேலும்  ராஜினாமா செய்து விட்டு சட்ட பேரவையில் இருந்து வெளியேறினார்  எடியூரப்பா

கர்னாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றாலும், மோடி  தொடர்ந்து மக்களுக்காக  நல்லது செய்வார் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்

பெரும் பரபரப்புக்கு நடுவே, பாஜக  எப்படியாவது பெரும்பான்மை நிரூபித்து விட்டு ஆட்சியை  தக்க வைத்துக்கொள்ளும் என நினைத்தால், இதற்கு மாறாக  தற்போது நிகழ்ந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
கழுத்தில் துண்டு போட்டு காசு வாங்கிய திமுக எம்.எல்.ஏ..! ED -யிடம் சிக்கிய வாட்ஸ்-அப் ஆதாரம்..!