கொச்சினுக்கு போக வேண்டாம். திரும்பி வா அமைச்சராக்குகிறேன்; கேட்பதெல்லாம் தருவேன்; எடியூரப்பா பாட்டீலுடன் பேசிய உரையாடல்;

First Published May 19, 2018, 4:13 PM IST
Highlights
conversation between Karnataka congress leader and congress minister


பா.ஜ.க தங்கள் தரப்பு எம்.எல்.ஏக்களை பேரம் பேசுகிறது. என்பதை நிரூபிக்கும் வகையில் எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலிடம், பேசும் ஆடியோவை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ். அந்த ஆடியோவில் காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம், அமைச்சர் பதவி தருவதாக கூறி தங்கள் பக்கம் ஈர்க்கப் பார்த்திருக்கிறார் எடியூரப்பா.

கொச்சினுக்கு பயனித்து கொண்டிருப்பதாக கூறும் எம்.எல்.ஏ பாட்டீல், எடியூரப்பாவிடம் பேசிய பிறகு 5 நிமிடங்களில் மீண்டும் அழைக்கிறேன். என கூறி அந்த ஃபோனை கட் செய்வதுடன். அந்த உரையாடல் நிறைவடைகிறது.

இன்னொரு ஆடியோவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்த், எம்.எல்.ஏவின் மனைவியிடம் 15 கோடி அல்லது அமைச்சர் பதவி, என பேரம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த உரையாடல் கீழ் வருமாறு

எடியூரப்பா-ஹாலோ

பாட்டீல்- அண்ணா நமஸ்காரம், வாழ்த்துக்கள்.

எடியூரப்பா- எங்க இருக்கீங்க?

பாட்டீல்- பஸ்ஸில் கொச்சின் போய்கொண்டிருக்கிறேன்.

எடியூரப்பா-கொச்சின் செல்ல வேண்டாம்.திரும்பி வா. நாங்கள் உன்னை அமைச்சராக்குகிறோம்.உனக்கு என்ன வேண்டுமானாலும் நாங்கள் உதவி செய்கிறோம்

பாட்டீல்- சரி அண்ணா. இப்போ சொல்லிட்டீங்கல்ல. சரி  அடுத்து என்னங்கறத பத்தி கொஞ்சம் சொல்லுங்க

எடியூரப்பா-நேரம் வரும் போது சொல்றேன்.இப்போ சொன்ன மாதிரி. இப்போ கொச்சின் போக வேண்டாம் திரும்பி வா.

பாட்டீல்- ஆனா நாங்க இப்போ பஸ்-ல இருக்குறோம்

எடியூரப்பா-போக வேண்டாம் ஏதாவது காரணம் சொல்லிட்டு வந்திடு

பாட்டீல்-அப்போ எனக்கு என்ன இடம் கிடைக்கும்

எடியூரப்பா- நீ அமைச்சராகலாம்

பாட்டீல்-அண்ணா என் கூட இன்னும் 3 பேர் இருக்குறாங்க.

எடியூரப்பா- அவங்களயும் உன் கூட கூட்டிட்டு வா. என் மேல நம்பிக்கை இருக்குல்ல?

பாட்டீல்-ஆமா; ஆமா;

எடியூரப்பா- அப்போ அந்த பஸ்-ல போகாத திரும்பி வா

பாட்டீல்-சரி அண்ணா சரி

எடியூரப்பா- அந்த பஸ்ல போய்டனா அதோட விஷயம் எல்லாம் முடிஞ்சுது. பிறகு எங்களால உன்ன பிடிக்க முடியாது .

பாட்டீல்-சரி அண்ணா சரி

எடியூரப்பா-சரி சொல்லு இப்போ என்ன செய்யப்போற?

பாட்டீல்-ஒரு 5 நிமிஷத்தில திரும்பி ஃபோன் செய்து சொல்றேன்

இவ்வாறாக அந்த உரையாடல் முடிவடைகிறது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இது குறித்து பேசுகையில், காங்கிரஸ் யாரையோ வைத்து செய்திருக்கும் தந்திரம் தான் இந்த ஆடியோ என தெரிவித்திருக்கிறார்.

click me!