
கடந்த 5ம்தேதி முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சசிகலா, சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதவி பிரமாணம் நேற்று செய்யப்படும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், கவர்னர் வராததால், அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவித்துக்கு சென்றார். அங்கு சுமார் ஒரு மணிநேரம் தியானம் செய்த, அவர் “தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக” குற்றஞ்சாட்டினார்.
இதைதொடர்ந்து இன்று காலை அவரது வீட்டில், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, சசிகலா தன்னை மிரட்டி கையெழுத்து வாங்கியதாக புகார் செய்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற உள்ளதாகவும், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் காட்டுவதாகவும் கூறினார்.
அப்போது, முன்னாள் சபா நாயகர் பி.எச்.பாண்டியன் அங்கு சென்றார். ஒ.பன்னீர்செல்வத்துக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்த அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அவரை பார்க்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. டாக்டர்களிடம் கேட்டால், நோய் தொற்று ஏற்படும் என கூறினார்கள். கடைசி வரை உடன் இருந்த சசிகலா குடும்பத்தினருக்கு ஏன் அந்த தொற்று ஏற்படவில்லை.
ஜெயல்லிதாவுக்கு தவறான மருந்து கொடுத்து கொன்றார்கள். இதற்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான தண்டனையும் கிடைக்கும். தவறான மருந்து கொடுத்து கொல்லப்பட்டார் ஜெயலலிதா என்ற செய்தி, விரைவில் டிவியில் வரப்போகிறது.
எங்களையும், பன்னீர்செல்வத்தையும், எம்எல்ஏக்களையும். நல்லாட்சியையும் தொந்தரவு யாரும் தொல்லை செய்ய கூடாது. அப்படி செய்தால், நான் இதுதொடர்பாக சட்டரீதியாக சந்திப்பேன். முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இந்த நிலை என்று கேள்விபட்டதும், நாங்கள் துடித்துபோய்விட்டேன். அதனாலேயே உடனடினயாக இங்கு ஓடிவந்தேன்.
டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றபோது, அவரிடம், நீங்கள் தைரியமாக இருங்கள் எனக்கூறினேன். சசிகலாவின் கூட்டத்துக்கு பணம் தான் முக்கியம். பணத்துக்காக அவர்கள், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.