தெருதெருவாய் மக்களை சந்திக்க..... களத்தில் சும்ம்மா கில்லியாய் இறங்கிய ஒபிஎஸ்......!!!

Asianet News Tamil  
Published : Feb 08, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தெருதெருவாய் மக்களை சந்திக்க..... களத்தில் சும்ம்மா கில்லியாய் இறங்கிய ஒபிஎஸ்......!!!

சுருக்கம்

ஒபிஎஸ்   :

கனத்த இதயத்துடன்  நேற்று  இரவு , ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் சுமார் 35 நிமிடம் தொடர்ந்து தியானத்தில் ஈடுப்பட்டு   இருந்தார்  ஒ பி எஸ் . பின்னர் பெருமூச்சியுடன், தெளிவான  சிந்தனையுடன் செய்தியாளர்களை  சந்தித்த  முதல்வர்  ஒபிஎஸ், பல்வேறு உண்மைகளை    மனம் திறந்து பேசினார்.

ராஜினாமா  வாபஸ் :

இந்நிலையில்,  செய்தியாளர்களுக்கு   பேட்டி அளித்த  பின்னர், ஒபிஎஸ் அவர்களுக்கு,  மக்களின்  அதரவு தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. ஒரு சில  எம் எல் ஏக்களும் ஒ பிஎஸ் -கு , ஆதரவாக  களம்  இறங்க  தொடங்கியுள்ளனர்.  இதனை தொடர்ந்து பேசிய ஒ பிஎஸ், தொண்டர்களின்  ஆதரவும்  , மக்கள்  ஆதரவும்  இருக்கும் தருவாயில்,   விருப்பமே  இல்லாமல்  கட்டாயத்தின்  பேரில்   ராஜினாமா  செய்த தன்னுடைய  முதல்வர்  பதிவியை   திரும்ப  பெற  ஆளுநரை நேரில்  சந்தித்து , ராஜினாமாவை  திரும்ப  பெற  உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

வீதி வீதியாக, கிராமம் கிராமமாக ......!

மக்களின்  மீது  முழு  அக்கரை  கொண்ட  ஒபிஎஸ்,  இனி  தெரு தெருவாய்  கிராமம் கிராமமாய் , மக்களை  தேடி  சென்று , அவர்களுக்கு  தேவையானதை   செய்ய  தனக்கு   முழு  விருப்பம்  உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

உதாரணம் :

வர்தா புயலின்  போது, தானும்  களத்தில்  இறங்கி   சுத்தப்படுத்தியவர்  ஒபிஎஸ், அதே  வேளையில் கச்சா  எண்ணெய்  கடலில்  கொட்டிய  போதும்,  நேரில்  சென்று  ஆய்வு  பணிகளை  துரித படுத்தியவர் ஒபிஎஸ்  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

Vijay: நீட் விலக்கு முதல் கல்வி நிதி வரை.. பிரதமர் மோடி முன்பு அதிரடி காட்டிய விஜய்.. வியந்து பார்த்த முதல்வர்கள்!
TVK CM VIJAY: தமிழக அரசியலில் புதிய திருப்பம்! தேர்தல் களத்தில் சவுக்கு சங்கர்? திரிஷாவுடன் சேர்த்து 5 பேரை டிக் அடித்த தளபதி?!