விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கைது... பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Sep 6, 2021, 12:28 PM IST
Highlights

கடலூர் கூத்தப்பக்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி குமார், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க அஷ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி சிலை அமைக்க, அனுமதி தர இன்னும் காலம் இருக்கிறது. அனுமதி மறுத்தால் விநாயகர் சதுர்த்தி துவங்கி மூன்று நாட்களுக்கு ஒரு லட்சம் பாஜகவினர் தத்தம் வீட்டு வாசல்களில் விநாயகரை வைத்து  வழிபாடு செய்வோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

இந்நிலையில், ‘’கடவுளை வைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்ய வேண்டாம். ஒன்றிய அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’ என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடலூர் கூத்தப்பக்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி குமார், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க அஷ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
 

click me!