விநாயகர் சதுர்த்தி தடை: முதல்வரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகின்றனர். அடக்கி வாசிக்கும் இந்து முன்னணி.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2021, 11:44 AM IST
Highlights

இந்து முன்னணி கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்ததை நீக்கக் கோரி மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்து முன்னணி கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்ததை நீக்கக் கோரி மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு 5 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தோம் இந்த ஆண்டு 10 லட்சம் வீடுகளுக்கு வெளியில் விநாயகர் வைத்து வழிபாடு செய்ய இருந்தோம். 

ஆனால் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு கொரொனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது அதனால் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.  ஆனால் இந்த ஆண்டு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது, பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், கடற்கரைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் விழாவிற்கு மட்டும் தடை விதித்துள்ளதாக என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி அளிக்க மறுப்பது ஏன் என்றார். விநாயகர் விவகாரத்தில் திட்டமிட்டு தமிழக அரசு சதி செய்கிறது என்றார். இதனை தமிழக அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், இந்து விரோதமாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. முதல்வருக்கு சில அதிகாரிகள் தவறாக வழி காட்டுகிறார்கள் என தெரிவித்தார். மேலும், இந்தபோராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

 

கொரோனா தொற்று ஆபத்து உள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழாவை கூட்டமாக கொண்டாட கூடாது எனவும், தனிமனித வழிபாடாக நடத்த வேண்டும் என்றும் இல்லங்களில் கூட்ட நெறிசல் இன்றி நடத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இனால் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தடையை நீக்க வில்லை என்றால் அத்துமீறி விநாயகர் ஊர்வலம் நடத்துவோம் என்றும், ஒரு கை பார்க்கலாம் என்றும் ஆவேசமாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விநாயகர் ஊர்வலத்தை தடுத்தால் திமுக ஆட்சி கலைய நேரிடும் எனவும் எச்சரித்தார்.

ஆனால் தமிழக அரசு முடிவில் உறுதியாக இருந்து வரும் நிலையில், மீறி ஊர்வலம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போலீஸ் சமீபத்தில் எச்சரித்திருந்தது, இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இன்று விநாயகர் ஊர்வலத்திற்கு தடையை நீக்க கோரி அக்கட்சி மாநிலத்தலைவர் தலைமையில்  உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய இந்து முன்னணி தலைவர் சுப்ரமணியன் முதல்வர் சில அதிகாரிகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும், விநாயகர் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க பரிசீலிக்க வேண்டும் என்றும் மிகவும் சாப்டாகவே கோரிக்கை வைத்தார். தடையை மீறுவோம், ஆட்சியை கலைப்போம் என்று  பேசிவந்த நிலையில் இந்து முன்னணியில் அணுகுமுறையில் மாற்றம் தென்பட்டதை பார்க்க முடிந்தது. 

 

 

 


 

click me!