வேளாங்கண்ணி தேர்திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு தடை.. சென்னை போலீஸ் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Sep 6, 2021, 11:00 AM IST
Highlights

அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள்  செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 

நாளை நடைபெறும் அன்னை வேளாங்கண்ணி  தேர்திருவிழாவில்  கலந்து கொள்ள  பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா 29.08.2021  அன்று தொடங்கி  08.09.2021 வரை நடைபெற உள்ளது. கொரோனா காலம் என்பதால் சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர், சென்னை பெருநகர மாநகராட்சி 13வது மண்டலம், 181வது வட்டம்,  திருவான்மியூர் காவல் நிலைய சரகம், அடையாறு காவல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழா ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். 49வது வருடாந்திர திருவிழாவின் கொடியேற்றம்   கடந்த 29.08.2021 அன்று நடைபெற்றது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், பொது நலன் கருதியும் கோவிட் – 19 பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை என்று சென்னை காவதுறை அறிவித்துள்ளது. 

நாளை 07.09.2021 தேரோட்டம் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. பொது மக்களும், பக்தர்களும்  தேரோட்ட நிகழ்ச்சியை தொலைக்கட்சி மற்றும் நேரடி சமூக வளைதளங்கள் மூலம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நாளை  பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள்  செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும், பக்தர்களும் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து விடு பட ஒத்துழைப்புநல்கி தேரோட்டம் நடைபெறும் நாளை 07.09.2021   பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  கலந்து கொள்வதை  தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை காவல்துறை கேட்டுகொண்டுள்ளது. 
 

click me!