15ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள்..? அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Sep 6, 2021, 10:58 AM IST
Highlights

ஒரு வார நிலவரத்தை தெரிந்த பின், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, 8ம் தேதிக்கு பின் உரிய முடிவு எடுக்கப்படும்

ஒன்பதாம் வகுப்பு மேல் உள்ள மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 15ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, 8ம் தேதிக்கு பின் முடிவு செய்யப்பட உள்ளது.

 

கொரோனா தொற்று 'ஆன்லைன்' வகுப்பு மட்டுமின்றி நேரடி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. கடந்த 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடக்கும் நிலையில், சில இடங்களில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், அவை பள்ளிகள் திறக்கும் முன்பே ஏற்பட்ட பாதிப்பு என தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து, வரும் 8ம் தேதிக்குப் பின் முடிவு செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், ‘’ஒரு வார நிலவரத்தை தெரிந்த பின், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து, 8ம் தேதிக்கு பின் உரிய முடிவு எடுக்கப்படும்'' என்றார். 

click me!