சிறையில் மீரா மிதுனை சந்தித்த நா.த.க வழக்கறிஞர் பிரிவு..??? அண்ணனே அனுப்பி வைத்தார் என கூறி அதிர்ச்சி..

Published : Sep 06, 2021, 09:57 AM IST
சிறையில் மீரா மிதுனை சந்தித்த நா.த.க வழக்கறிஞர் பிரிவு..??? அண்ணனே அனுப்பி வைத்தார் என கூறி அதிர்ச்சி..

சுருக்கம்

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கு கடந்த மாதம் 14ஆம் தேதி மீரா மிதுனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

பட்டியலின சமூக மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சர்ச்சை நடிகை மீரா மிதுன் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் அவரை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சிலர் நேரில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகையும், மாடல் அழகியுமான  மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் தகாத இடத்தில் கை வைத்தார் என குற்றச்சாட்டு கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் அதில் உண்மை இல்லை என்பதால், அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து சமூக வலைதலங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வகையில் நடந்தும், பேசியும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கு கடந்த மாதம் 14ஆம் தேதி மீரா மிதுனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதே நேரத்தில் ஏற்கனவே அவர்மீது நிலுவையில் உள்ள பல வழக்குகளில் போலீசார் அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மீரா மிதுன் சார்பிலும் அந்த வழக்குகளில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நட்சத்திர விடுதியில் மேலாளரை மிரட்டியதாக ஏற்கனவே எழும்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. ஆனாலும் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசிய வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால் அவர் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சிலர் மீரா மிதுனை சிறையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மீரா மிதுனை சந்தித்த அந்த வழக்கறிஞர்கள், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் தங்களை அனுப்பி வைத்ததாகவும், விரும்பினால் தங்களுக்கு சட்ட உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் அவர்கள் மீராவிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பாஜகவில் இருந்து பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்த கே.டி ராகவன் விவகாரத்தில் கே.டி ராகவனுக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மீரா மிதுனை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் என கூறிக்கொண்டு சிலர் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!