உதயநிதியின் அரசியல் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அண்ணாமலையை ஓங்கி அடித்த சேகர் பாபு.

Published : Sep 06, 2021, 12:13 PM ISTUpdated : Sep 06, 2021, 12:34 PM IST
உதயநிதியின் அரசியல் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அண்ணாமலையை ஓங்கி அடித்த சேகர் பாபு.

சுருக்கம்

உதயநிதி அரசியலில் பிரகாசிக்கமாட்டார் என்ற அண்ணாமலை கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர், ஒரு செங்கலை வைத்து இந்திய துணைக்கண்டங்களில் உள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. 

உதயநிதி அரசியலில் பிரகாசிக்க மாட்டார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில்,  ஒற்றை செங்கலை வைத்துக்கொண்டு நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தவர் உதயநிதி, இப்படி இருக்க எத்தனை அணைகள் போட்டாலும் அவரது அரசியல் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்ததிலிருந்தே அண்ணா திமுகவை காட்டிலும் அதிமகவை மிக மோசமாகவும், கடுமையாகவும் பாஜக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், அந்த விமர்சனங்களும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதிக்க முடியாது என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர்  கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:


தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு இந்து அறநிலைத் துறை மானியக் கோரிக்கையில் சிறப்பாக அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது என்றார், அரசியல் நடத்த அரசியல் கட்சிகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளது, ஆனால் கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார். கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று நான் அவரை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது என எச்சரித்த அவர், பக்கத்து மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ளது. ஆனால் விழாக்கள் மூலம் மக்கள் அதிகமாக கூட அனுமதிப்பதன் மூலம் தொற்று அதிகரிக்க நேரிடும். 
 

மற்ற மாநிலங்களைப் போல மோசமான நிலைக்கு தமிழகமும் தள்ளப்பட நேரிடும், அதுபோன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று நாம் வீட்டில் இருந்தபடியே விநாயகரை வழிபட வேண்டும். அப்படி செய்தால் விநாயகர் அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள் என்றார். உதயநிதி அரசியலில் பிரகாசிக்க மாட்டார் என அண்ணாமலை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒரே ஒரு ஒற்றை செங்கல்லை வைத்துக் கொண்டு இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்தவர் உதயநிதி.

நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசியலில் தனி முத்திரை பதித்தவர் உதயநிதி, எத்தனை அணைகள் போட்டாலும் உதயநிதியின் அரசியல் வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது என அண்ணாமலைக்கு அவர் பதிலடி கொடுத்தார். மேலும், கோயில்களில் இன்று முதல் முடி காணிக்கை செலுத்துவதற்கு இலவசம் என்றும் பழனி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கலில் முடி காணிக்கை செலுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளது என்று கூறினார். இந்நிலையில் கோயில்களில் மொட்டையடிக்கும் பணியாளர்களுக்கு உரிய தொகையை வழங்கள் கோயில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்
.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் ஆணையத்தை ஏமாற்றிய அன்புமணி..! டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு..! ஆதாரத்தை காட்டி பாமக அருள்..!
மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!