கள்ள உறவில் பிறந்தவர் ஈ.பி.எஸ், ராசாவின் பேச்சால் சர்ச்சை

By Asianet TamilFirst Published Mar 26, 2021, 5:44 PM IST
Highlights

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து தரம் தாழ்ந்த வகையில் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிராக பெண்கள், பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை ராசாவின் பேச்சு மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க முன்னாள் அமைச்சர் ராசா, ”ஸ்டாலின் நல்ல உறவின் மூலம் பிறந்த குழந்தை” என்றும் ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை” என்று பேசினார். ராசாவின் இந்த பேச்சுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் என்றும் பார்க்காமல் தரம் தாழ்ந்த வகையில் ராசா பேசியது அரசியல் வட்டத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்பதை ராசா மீண்டும் நிரூபித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற விரக்த்தியில் தி.மு.கவினர் முதலமைச்சர் மீது கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதாக அரசியல் விமர்சர்கள் தெரிவிகின்றனர். 

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.” என ராசாவுக்கு தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இதேபோல் பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் ராசாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக தேர்தல் களம் யார் எப்படிபட்டவர்கள் என்பதை தோலுறித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது. இது போன்று தரம் தாழ்ந்த வகையில் பிரச்சாரம் செய்பவர்களை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

click me!