வாட்ச் பில் இருக்கட்டும்; முதலில் டாஸ்மாக் பில்லை காட்டுங்க - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சவால் விட்ட பெண்!

By Raghupati RFirst Published Dec 24, 2022, 3:47 PM IST
Highlights

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் தொடர்ந்து கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது.

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சமீபகாலமாக அரசியலில்வாதிகளின் உடை, பயன்படுத்தும் பொருட்கள் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கையில் கட்டி இருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய். ரபேல் விமானத்தின் மூலப் பொருட்களைக் கொண்டு இந்த வாட்ச் தயாரித்தார்கள்.

மொத்தம் 500 வாட்சுகள் நாட்டில் இருக்கின்றன. ரபேல் விமானம்  ஓட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. அதன் பாகத்தில் இருக்கும் இந்த வாட்சை கட்டி இருக்கிறேன். ஒவ்வொரு வாட்ச்சிற்கும் எண் இருக்கும், இது 149வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கிறேன்,  இது என் தனிபட்ட விஷயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது மீதான விமர்சனத்திற்கு பதில் அளித்து இருந்தார்.

இதையும் படிங்க..கடலுக்கு அடியில் ராமர் பாலம் இல்லை.. மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல் - அன்றே கணித்தார் கருணாநிதி!

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்று பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த பெண் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசும் பெண் ஒருவர், அண்ணாமலை கட்டிய கடிகாரத்தின் பில்லை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்கிறார். ஆடு மேய்கிறவருக்கு எப்படி 5 லட்ச ரூபாய் வாங்க முடிந்தது என்று கூறுகிறார். அப்போ அமைச்சர் செந்தில் பாலாஜி ஆடு மேய்கிறவர்கள் போன்றவர்களை அவமானப்படுத்துகிறாரா ? என்ற கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அந்த பெண், நிறைய படித்த இளைஞர்கள் தற்போது விவசாயம் செய்து வருகிறார்கள். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி 5 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை கட்ட முடியாதா ? திருட்டு ரயில் ஏறி வந்தவர்களின் வாரிசுகள் 14 கோடிக்கு கடிகாரத்தை கட்டியுள்ளார்கள். இதை பற்றி அமைச்சர் கேள்வி கேட்பாரா ? அசுரன் திரைப்படம் வந்த போது, மூல பத்திரம் கேட்டதற்கு கொடுத்தீர்களா ?

டாஸ்மாக் அமைச்சராக இருக்கும் நீங்கள் எப்பொழுதாவது வாங்கும் மதுவுக்கு பில் கொடுத்து இருக்கிறீர்களா ? க்யூஆர் கோடை பயன்படுத்தலாம். அதன் ஏன் பயன்படுத்தவில்லை. கோடிக்கணக்கில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ஊழல் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ்மாக்குக்கு பில் கொடுங்க. அண்ணாமலை அவர்கள் விரைவில் வாட்ச் பில், அவரின் சொத்து விபரம் அதுமட்டுமல்ல ஆளும் கட்சியின் சொத்து விவரங்களையும் வெளியிடுவார் என்று கூறியுள்ளார் பாஜக பெண்மணி.

இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!

click me!