
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் கணவர் தம்மை லஞ்சம் கேட்டு மிரட்டியதாக பெண் அதிகாரி ஒருவர் நேரடி வாக்குமூலம் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள மீனாட்சி, அமைச்சர் டாக்டர் சரோஜா மீது அடுத்தடுத்த பகீர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதால் எடப்பாடி அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒப்பந்த அடிப்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மீனாட்சி.
இவர் தற்போது அமைச்சர் சரோஜாவால் நேரடியாக மிரட்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
ஜெ. உயிருடன் இருந்தவரை நியமன விசயத்துக்கு கூட கட்சி தொண்டர்களிடமோ அல்லது நிர்வாகிகளிடமோ அரசு அதிகாரிகளிடமோ முறை தவறி பேசமாட்டார்கள்.
ஆனால் தற்போது ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற ரீதியில் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் ஆகியோர் வந்த வரை லாபம் என்ற வகையில் லஞ்சத்தை வாங்கி அள்ளி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் டாக்டர் சரோஜாவின் கணவர் லோகநாதன் 30 லட்சம் ரூபாய் கொடுக்க முடியாவிட்டால் உன்னுடைய பதவி பறிபோய் விடும் மேலும் புதிய அதிகாரியை நியமித்தால் ரூ.30 லட்சம் பணம் கிடைக்கும். என தொடர்ந்து மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் சரோஜா குடும்பத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் மீனாட்சி தற்போது அரசின் வண்டவாளங்களை புட்டு புட்டு வைப்பதால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.