
ஓபிஎஸ் அணியில் இருந்து வருபவர்களுக்கு கட்சியும் அரசும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக சசிகலா தலைமையில் ஓர் அணி, ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணி என இரண்டாக பிரிந்தது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனும் சிறை சென்றுவிட்டதால் இரு தரப்பு அணிகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
ஆனாலும் 2 தரப்பினரும் முரண்பாடான கருத்துகளை கூறி வருவதால் அதிமுகவில் பிளவுபட்ட அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளகளிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் அணியில் இருந்து வருபவர்களுக்கு கட்சியும் அரசும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் என்று தெரிவித்தார்.
இது போன்ற சலுகைகளை அறிவித்து ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏ க்கள் மற்றும் எம்.பி.க்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.