
சசிகலாவை ஓபிஎஸ் ஒருவரால்தான் எதிர்க்க முடியும்…தீபா பேரவையில் இருந்து கூண்டோடு விலகிய தொண்டர்கள்....
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்தததையடுத்து சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என தனித்தனி பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் தொடக்கத்தில் இரு தரப்பினரும் ஒரே அணியாக இருந்தபோது சசிகலா பொதுச் செயலாளராக தோந்தெடுக்கப்பட்டபோது அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அடிமட்டத் தொண்டர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிக்கத் தொடங்கினர் தியாகராயநகரில் உள்ள அவர் வீட்டுக்கு ஏராளமான தொண்டர்கள் வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்த பிறகு தீபா ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது பக்கம் வரத் தொடங்கினர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்ட தீபா பேரவையைச் சேர்ந்த தொண்டர்கள் கொத்துக் கொத்தாக ஓபிஎஸ் அணிக்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த தீபா பேரவையைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூண்டோடு பேரவையை கலைத்துவிட்டு ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
அப்போது சசிகலாவை எதிர்த்து அரசியல் நடத்த ஓபிஎஸ் ஒருவரால் தான் முடியும் என்றும், குடும்ப ஆட்சியை விரட்டியடிக்க தர்மயுத்தம் தொடங்கியிருக்கும் ஓபிஎஸ்ஐ தொடர்ந்து ஆதரிக்கும் விதமாக அவரது பின்னால் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.