ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி..? கடும் அப்செட்டில் கே.டி.ஆர்..!

By Thiraviaraj RMFirst Published Jan 10, 2022, 2:41 PM IST
Highlights

வெற்று  கோஷம் போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.  அதே வேளை அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எவருமே வராதது ஒரு புறமிருக்க, ஓரிருவர் தவிர நகர, ஒன்றிய செயலாளர்களிலும் ஒருவர் கூட வரவில்லை.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை மறுநாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். அரசு வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக ராஜேந்திர பாலாஜி மீது 35 பேர் புகார் அளித்துள்ளனர். 

ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் 1 மாதம் ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1000பேர் சிறைகளில் இருக்கும் போது ஒரு நாள் கூட இவரால் சிறையில் இருக்க முடியதா?  என தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:- முதல்வரை தமிழ்நாடே வரவேற்கிறது.. பாராட்டி தள்ளிய ஆர்.பி.உதயகுமார்.. அப்படி என்ன செய்தார் ஸ்டாலின்?

இந்நிலையில் தனக்கு ஆதரவாக அதிமுகவினர் திரண்டு வருவார்கள் என எதிர்பார்த்திருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பண மோசடி வழக்கில் தலைமறைவாகி சமீபத்தில், கர்நாடக மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

பத்தாண்டாக அமைச்சராகவும் அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்தவர். இப்படி பட்ட நபரை கைது செய்து உள்ளூர் கொண்டு வந்தால் போலீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் குவிந்து ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது என்று போலீஸ் அதிகாரிகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அதற்கு ஏற்றார்போல, நாற்பதுக்கும் குறைவாகவே முன்னாள் அமைச்சரின் அடி பொடிகள் மட்டுமே வந்துள்ளனர். வெற்று  கோஷம் போட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்.  அதே வேளை அதிமுக கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எவருமே வராதது ஒரு புறமிருக்க, ஓரிருவர் தவிர நகர, ஒன்றிய செயலாளர்களிலும் ஒருவர் கூட வரவில்லை. அவர் அமைச்சராக இருந்தபோது நம்மை மதிக்கவே இல்லை. 
சம்பாதித்த பணத்தை அவரே வைத்து கொண்டார். தொண்டர்களுக்கு ஒரு உதவியும் செய்ய வில்லை. இவர் செஞ்ச தப்புக்கு நாம ஏன் சப்போர்ட் செய்யணும் என சொந்தக் கட்சியினரே முணுமுணுக்கிறார்கள்.

திருச்சி சிறையில் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை வழக்கறிஞர் தவிர வேறு யாரும் சந்திக்க அனுமதியில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் இதுவரை அவரை சிறையில் சந்திக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் அவரது வழக்கறிஞர் திருச்சி சிறையில் ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி தற்போது நலமாக உள்ளதாகவும் தைரியமாகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும், ஓய்வு நேரங்களில் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்ட ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் தன்னை சிறையில் சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகங்கள் கேட்டு வாங்கிக் கொண்டுள்ளார். சிறையில் தனிமையில் இருக்கும் நேரங்களில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புத்தகங்களைப் புரட்டியபடியே நேரத்தைக் கழிக்கிறாராம் ராஜேந்திர பாலாஜி. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 

click me!