" இனி உதய் அண்ணன் தொகுதியில மின்வெட்டே இருக்காது " .. செய்துகாட்டிய செந்தில் பாலாஜி.. குதுகளத்தில் உ.பிக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 10, 2022, 2:22 PM IST
Highlights

எனவே இதன்மூலம் மின் தடைகளை குறைக்கவும் முடியும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இந்த இயந்திரங்களை இயக்க முடியும் என்பதால் மழைக்காலங்களில் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், இந்த இயந்திரங்கள் உதவுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான  RMU எந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மின்வெட்டை தவிர்க்க RMU எனப்படும் வளைய சுற்று தர அமைப்பு இயந்திரங்களின் செயல்பாட்டை உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இன்று துவக்கி வைத்துள்ளார். இனி அந்தப் தொகுதியில் மின்வெட்டு இருக்காது எனவும் கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் ஆழ பதிந்துவிட்ட மின்வெட்டு என்ற அதிருப்தியே ஆகும். அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி, போதிய அளவில் மின் கட்டுமானங்களை உருவாக்காததன் காரணமாக திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு நிலவியது. வெட்கை தாங்காமல் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வீதிக்கு வந்து போராடிம் நிலை ஏற்பட்டது. எதிர்க்கட்சிகளும்  திமுகவுக்கு எதிரான தேர்தல் பிரச்சார யுக்திக்கு அதை சரியாக பயன்படுத்தி கொண்டன. இதன் விளைவாக திமுக ஆட்சியை இழந்தது,

அதற்கு அடுத்து 10 ஆண்டுகள் கழித்தே படாதபாடு பட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது திமுக. இந்நிலையிலும் அதிமுக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்பதுதான். மிகவும் சவாலான மின்சாரத் துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் கட்டமைப்புகள்  உருவாக்கப்படவில்லை, பயன்பாட்டில் உள்ள கட்டுமானங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை அதுதான் இவற்றுக்கெல்லாம் காரணமென்று கூறியதுடன், அணில், எலி போன்ற உயிரினங்கள் மின் வயர்களை சேதப்படுத்துவதால் மின்வெட்டு ஏற்படுகிறது என எதையெதேயோ கூறி எதிர்கட்சிகளை வாயடைக்க வைத்தார். 

ஆனால் இந்த சமாளிப்புகேஷன் நீண்ட நாளைக்கு உதவாது என புரிந்துகொண்ட அவர், ஆற்காட்டாரை போல தாமும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பலியாகி விடுவோம் என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி உண்மையிலேயே மின்சார கட்டமைப்பில் என்னதான் பிரச்சினை என ஆராய தொடங்கியுள்ளார். அதன் விளைவாக மின்வெட்டு இல்லாத சூழலை உருவாக்குவதற்கான பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் RMU எனப்படும் நவீன வளைய சுற்று தர அமைப்பு என்ற இயந்திரங்களை கொள்முதல் செய்து சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 இடங்களில் இன்று பொருத்தப்பட்டுள்ளது.  அதாவது துணை மின் நிலையங்களில் இருந்து வரும் மின்சாரம்  RMU எந்திரங்களின் வழிய மின்மாற்றிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் குறைந்தபட்சம் இரு வழிப்பாதைகளுடன் இந்த இயந்திரங்கள் அமைக்கப்படுவதால் ஒரு வழிப்பாதையில் மின் பழுது ஏற்பட்டாலும் மற்றொரு மின் வழிப்பாதையில் மின்சாரத்தை மின் தடை ஏற்பட்ட பகுதிக்கு இந்த இயந்திரம் மூலம் அனுப்ப முடியும்.

எனவே இதன்மூலம் மின் தடைகளை குறைக்கவும் முடியும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தே இந்த இயந்திரங்களை இயக்க முடியும் என்பதால் மழைக்காலங்களில் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், இந்த இயந்திரங்கள் உதவுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான  RMU எந்திரங்களின் செயல்பாட்டை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தற்போது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக இந்த எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் இனி மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என கூறப்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடுகிறது என செந்தில்பாலாஜி மீது எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இறைத்தன, செந்தில்பாலாஜியும் பிரச்சனை இதோ சரி செய்யப்படும் அதோ சரி செய்யப்படும் என்று கூறி வந்த நிலையில்,  இப்போது உதயநிதியை வைத்தே மின்வெட்டை கலையும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்துள்ளார்.

எதிர்கட்சிகளை சமாளிப்பது ஒரு புறம் இருந்தாலும் சொந்தகட்சியில் பவர்பாயிண்டை குளிரவைத்துவிட வேண்டும் என்பதில்  அவர் குறியாக இருந்து வருகிறார். அதனால்தான் உதயநிதி தொகுதியில் இந்த புதிய திட்டம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மின்வெட்டு அதிகம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றாக இருந்து வரும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியில் இனி மின்வெட்டு இருக்காது என்ற சூழல் இதன் மூலம் உருவாகும் என நம்பப்படுகிறது. இதனால் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது உதயநிதி ஸ்டாலின் ஹேப்பி மூடில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொகுதிக்கு செல்லும்போதெல்லாம் அடிக்கடி மின்சாரம் கட் ஆகிறது என தொகுதி மக்கள் உதய்க்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி உதவி அண்ணன் தொகுதியில் மின்வெட்டே இருக்காது போங்க என உடன் பிறப்புகள் புலங்காகிதம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!