பிரேமலதாவின் பேச்சால் அதிமுக உடனான கூட்டணி நீடிக்குமா? கடுப்பில் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Feb 28, 2021, 5:43 PM IST
Highlights

கூட்டணி குறித்து அதிமுக தேர்தல் குழு விஜயகாந்தை சந்தித்து பேசி இருக்கும் நிலையில் தேமுதிக தனித்து நின்றாலே 10 சதவீத வாக்குகளை பெற முடியும் என்று பிரேமலதா கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கூட்டணி குறித்து அதிமுக தேர்தல் குழு விஜயகாந்தை சந்தித்து பேசி இருக்கும் நிலையில் தேமுதிக தனித்து நின்றாலே 10 சதவீத வாக்குகளை பெற முடியும் என்று பிரேமலதா கூறியிருப்பது அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் எஸ்.எஸ் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது பேசிய பிரேமலதா;- தேமுதிகவின் தன்மானத்திற்கு இழுக்கு வருவதற்கு 1 சதவீதம் கூட தலைமைக் கழகம் முடிவு எடுக்காது. தேமுதிக தனித்துப் போட்டியிடுவதை நான் விரும்புவதாகவும், ஆனால் கேப்டன் விஜயகாந்த் மற்றும் கழகத் தோழர்களின் ஆலோசனையின்படி வாக்குகளைப் பெறுவது விட வெற்றி பெறுவது தான் முக்கியம் என்பதால் தான் கூட்டணி அமைக்கின்றோம்.

விரைவில் நமக்கான காலம் வரும் எனவும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் 10 சதவீத வாக்குகளை பெற முடியும். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் அல்லது கூட்டணி வைத்து போட்டியிட்டாலும் கேப்டன் விஜயகாந்த் காட்டுகின்ற வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து அவரை வெற்றி பெறச் செய்ய அயராது பாடுபட வேண்டும் என கூறினார்.

இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுகவின் தேர்தல் குழுவை சேர்ந்த கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். சென்னையில் உள்ள  விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் பாமகவுக்கு இணையான தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் தேமுதிக தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிமுக தேர்தல் குழுவினர் விஜயகாந்தை சந்தித்து பேசிய அதேவேலையில் தனித்து போட்டியிட்டாலே கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று பிரேமலதா பேசியிருப்பது கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

click me!