அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

Published : Feb 28, 2021, 03:06 PM IST
அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்ட முக்கிய நிர்வாகி... ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி நடவடிக்கை..!

சுருக்கம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த உப்பிலியாபுரம் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த உப்பிலியாபுரம் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்,  முதல்வரமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த உப்பிலியாபுரம் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஏ.ராஜா இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!