வன்னியர்கள் நிறைந்த கீழ்பென்னாத்தூர் தொகுதி... அதிமுக - பாமகவினர் இடையே கடும் போட்டி..!

By vinoth kumarFirst Published Feb 28, 2021, 4:52 PM IST
Highlights

வன்னியர்கள் நிறைந்த கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதில் பாமக-அதிமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

வன்னியர்கள் நிறைந்த கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதில் பாமக-அதிமுகவினர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில், கீழ்பென்னாத்தூர் தொகுதி 2011ம் ஆண்டு தொகுதி வரையறையின்போது உருவாக்கப்பட்டது. வன்னியர் ஓட்டுகள் நிறைந்த இந்த தொகுதியில், 2011ல் நடந்த தேர்தலில், வன்னியர் இனத்தை சேர்ந்த அதிமுகவை சேர்ந்த அரங்கநாதன், திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பிச்சாண்டியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

இதனையடுத்து, கடந்த, 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பிச்சாண்டி, 99,070 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமணி, 64,404 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். பாமக தனித்து போட்டியிட்டு, 20,737 ஓட்டுகள் பெற்றது. தற்போது, அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்த 23 தொகுதிகளில் கீழ்பென்னாத்தூர் தொகுதியை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என பாமக-அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், இந்த முறையும் திமுக சார்பில் கு.பிச்சாண்டி போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளது. இதனால், இருகட்சிகளுக்கு இடையே யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதில் கடும் போட்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!