சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சேலம் மாநகராட்சி 18-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் சர்க்கரை சரவணன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ இராஜேந்திரன் குறித்து தனது முகநூல் பக்கத்தில், கட்சி சீனியர்களை மாவட்டச் செயலாளர் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவருடைய சமூகத்தினருக்கே அனைத்து பொறுப்புகளையும் வழங்குகிறார் என்று பதிவிட்டிருந்தார்.
undefined
அதேபோன்று தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரும், மாவட்டச் செயலாளர் குறித்து தலைமையிடம் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட காரணத்தினால் சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சேலம் மத்திய மாவட்டம் , சேலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் சக்கரை ஆ.சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜெ. ஜெயக்குமார் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.