ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை இந்து மதத்தில் முதலில் அமல்படுத்துங்கள்..! மோடிக்கு பதிலடி கொடுத்த திமுக

By Ajmal Khan  |  First Published Jun 28, 2023, 12:27 PM IST

நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியினரும், இந்தியாவில் உள்ள எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லவும், அர்ச்சனை செய்யவும் பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும் என டிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 


இரு நாட்டில் இரண்டு சட்டங்கள்

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி ஒரே நேரத்தில் 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Tap to resize

Latest Videos

அப்போது, பொது சிவில் சட்டம்  ஒரு குடும்பத்தின் வெவ்வேறு உறுப்பினர்களுக்கு வெவ்வேறு விதிமுறைகள் இருப்பதை ஏற்க முடியாதோ அது போல், ஒரு நாடு இரண்டு சட்டங்களின் கீழ் இயங்க முடியாது என்றும் கூறினார். முத்தலாக்கை யார் யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ, அவர்களெல்லாம் வாக்கு வங்கிப் பசியில் இருக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டது ஏன்.?

முத்தலாக் இஸ்லாமிய மதத்தில் மிக அவசியமானது என்றால், எதற்காக கத்தார், ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் அது தடைசெய்யப்பட்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார். முத்தலாக், இஸ்லாமியப் பெண்களைத் தாண்டி மொத்த குடும்பத்தையே சீரழித்துவிடும் என தெரிவித்தார். நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் வழங்குவதாக சுட்டிக்காட்டிய அவர், உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார். இந்தநிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 

இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம்

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதை பற்றி பிரதமர் முதலில் பேசட்டும் என தெரிவித்து்ள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்  கே.சி.வேணுகோபால் மற்ற பிரச்சினைகளிலிருந்தும் மக்களை திசை திருப்ப பொது சிவில் சட்டம் குறித்து அவர் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். இதே போல திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்,

அரசியல் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளதால் பொது சிவில் சட்டம் தேவையில்லையென கூறினார்.  இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியினரும், இந்தியாவில் உள்ள எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டவர், பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும் என டிகேஎஸ் இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

PM Modi : பாஜக மிஷன் 2024.! முஸ்லீம் ஓட்டுக்களை தட்டி தூக்கிய மோடி.. அப்படி என்ன பேசினார் பிரதமர் மோடி?

click me!