சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்ற திமுக எம்.பி. ஞானதிரவியத்தை கைது செய்ய வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
தென்னிந்திய திருச்சபை எனப்படும் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. கோடிக்கணக்கில் சொத்துகளைக்கொண்ட நெல்லை திருமண்டலத்தில் பிஷப்பாக பர்னபாஸ் இருந்து வருகிறார். இந்த கோடிக்கணக்கான சொத்துகளை அபகரிக்க முயன்றதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு அப்பொறுப்பில் இருந்து எம்.பி ஞானதிரவியம் நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க;- எம்.பி. ஞானதிரவியத்தை திமுக தலைமையை தொடர்ந்து ரவுண்ட் கட்டும் போலீஸ்.. கைது செய்ய திட்டமா?
இந்த விவகாரம் தொடர்பாக பிஷப் தரப்பினர் திமுகவின் எம்.பி-யான ஞானதிரவியம் தொடர்பாக கட்சித் தலைமைக்கு புகாரளித்தனர். இதனால், ஆத்திரமடைந்த திமுக எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் மதபோதகர் காட்வே நோபல் என்பவரை கடுமையாக தாக்கி தகாத வார்த்தையால் திட்டி ஓட ஓட விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி. ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை! நெல்லை திமுக எம்.பி.ஞானத்திரவியத்திற்கு கட்சி தலைமை.!
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி. ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
சிறுபான்மையினர்களின் பாதுகாவலர் எனக் கூறிக் கொள்ளும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு நடந்திருப்பது திமுகவின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரத் தாக்குதல் நடத்திய அவர், மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கே தகுதி இல்லாதவர்.
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் சொத்துகளை அபகரிக்க முயன்றதாக எழுந்த புகாரில் கல்விக்குழு உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிய பேராயர் பர்னபாஸுக்கு எதிராக தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்திய திமுக எம்.பி., ஞானதிரவியத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.…
— TTV Dhinakaran (@TTVDhinakaran)
வெறுமனே வழக்குப்பதிவு மட்டும் செய்யாமல் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.