அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறை 2 மாத காலத்தில் விசாரத்து அறிக்கை அளிக்க தெரவித்து இருந்தது. இதனையடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தது. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய பகுதியில் அடைப்பு இருப்பது தெரியவந்தையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
undefined
இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி
அதே நேரத்தில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அமைச்சர் பதிவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் தமிழக முதலமைச்சர் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக நியமனம் செய்தார். செந்தில் பாலாஜியிடம் இருந்த துறைகளை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுவிடம் பிரித்து கொடுத்தார். இதற்கு தமிழக ஆளுநர் ரவியும் எதிர்ப்பு தெரிவித்தார். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்வதை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென கூறியிருந்தார். இதனையடுத்து தமிழக அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட வழிவகை செய்தார்.
அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது பண மோசடி செய்தது, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி பதவியில் நீடிப்பார் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆகையால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவு
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க கோரியை வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கும மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படியுங்கள்