எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன்..? ஆடியோவில் சசிகலா சொன்ன தகவல்..!

By Asianet TamilFirst Published Jun 27, 2021, 8:57 PM IST
Highlights

கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றுதான் யதார்த்தமாக பதவியை (முதல்வர்) கொடுத்துவிட்டு சென்றேன் என்று சசிகலா ஆடியோவில் தெரிவித்துள்ளார். 
 

அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், புலவருமான புலமைப்பித்தனுடன் சசிகலா இன்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, புலமைப்பித்தனின் பாடல்கள் தொண்டர்களுக்‍கு உற்சாகம் அளித்ததை சசிகலா சுட்டிகாட்டி பேசினார். அப்போது சசிகலா பேசுகையில், “அதிமுக தொண்டர்களின் கட்சி. எம்.ஜி.ஆர். காலத்து ஆட்கள் தன் பக்‍கம் இருப்பது தமக்‍கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார். 
இதேபோல தருமபுரியைச் சேர்ந்த தொண்டர் ஒருவருடன் சசிகலா தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் பெங்களூருவிலிருந்து வரும்போது அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை. அதனால்தான் தற்போது அம்மாவின் ஆட்சியை இழந்து நிற்கிறார்கள். எல்லா ஊர்களிலும் இருந்து தொண்டர்கள் என்னிடம் அவர்களுடைய மன வருத்தத்தை சொல்கிறார்கள். இந்த இயக்கத்தை கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறோம். எனவே, இனிமேலும் சும்மா இருக்க முடியாது.


தொண்டர்களோடு இணைந்து இந்தச் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும். இதுவே என்னுடைய ஆசை. நிச்சயம் அதை செய்வேன். எல்லாம் மிக விரைவில் சரியாகிவிடும். சரி செய்து விடுவேன். சாதி, மதம் என எதையும் பார்க்காமல்தான் கட்சியை வளர்த்தோம். ஆனால், நான் எப்படி பார்த்தேன் என்றால், கொங்கு எம்ஜிஆர் மீதும் ஜெயலலிதா மீதும் அதீத பாசம் கொண்டவர்கள். அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட்டு பழக்கப்பட்டவர்கள்.

எனவே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றுதான் யதார்த்தமாக பதவியை (முதல்வர்) கொடுத்துவிட்டு சென்றேன். அந்த நேரத்தில் நான் எதைப் பற்றியும் நான் நினைக்கவில்லை. இப்போது நினைக்கிறபோது கஷ்டமாக இருக்கிறது. விரைவில் வருவேன். கவலை வேண்டாம்” என்று அந்த ஆடியோவில் சசிகலா பேசியுள்ளார்.
 

click me!