
கடவுளான ராமர் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்ததைப் போல், சென்னை ஆர்.கே நகர் வேட்பாளர்களில் மற்ற வேட்பாளர்களை விட மோசமான டி.டி.வி. தினகரனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவதாக பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டு வந்தார். தன் கட்சி வேட்பாளர் தேர்தல் களத்தில் இருந்தாலும், தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
தினகரன் வெற்றி பெற்றதும், முதலமைச்சர் அணியும், தினகரன் அணியும் இணைந்து 2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் டுவிட்டர் பக்கத்தில் சு.சுவாமி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொதகுதியில் பாஜக வேட்பாளரைவிட்டுவிட்டு ஏன் தினகரனுக்கு ஆதரவு தருகிறீர்கள் ? என்று பலர் கேள்வி எழுப்பிய போது பதில் ஏதும் கூறாமல் இருந்துவந்த சாமி, தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் புது விளக்கம் அளித்துள்ளார்.
அதில் ஆர்.கே நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட ‘பாவியான’ டி.டி.வி.க்கு முன்னுரிமை அளிக்கிறேன் என கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் என படியுங்கள் என்று கூறினேன் என அவர் இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.