ஆமைத் தலையர் என சொன்னதற்கு... மூட்டைபூச்சி போல நசுக்கிவிடுவேன்... தினகரனை திட்டிய அமைச்சர்!

 
Published : Dec 27, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
ஆமைத் தலையர் என சொன்னதற்கு... மூட்டைபூச்சி போல நசுக்கிவிடுவேன்...  தினகரனை திட்டிய அமைச்சர்!

சுருக்கம்

Minister Jayakumar compared the bed bugs with Dinakaran

“ஆமைத் தலையர் ஜெயக்குமார்” என்றும் “இடிச்சப்புளி பழனிச்சாமி”  என அமைச்சர் ஜெயக்குமாரையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி மிஸ்டர் கூல் என பெயரெடுத்த தினகரன் உருவ கேலியாக பேசியதற்கு மூட்டப்பூச்சி தினகரன், மூட்டைப்பூச்சிகள் நசுக்கி போடப்பட வேண்டியவை என பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ஜெயகுமார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அதிமுக தலைமை கழகத்தில் நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பின் தினகரன் ஆதரவாளர்களை மாவட்ட பொறுப்பிலிருந்து  நீக்கியதற்கு “ஆமைத் தலையர், காமெடியன்” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை “இடிச்சப்புளி பழனிச்சாமி” என நக்கல் கலந்து கிண்டலடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று செய்தியாளர்களுக்கிடையே பேசிய அமைச்சர் ஜெயகுமார்; மூட்டைப் பூச்சிக்கெல்லாம் அஞ்சாத இயக்கம் அதிமுக. மூட்டைப் பூச்சிகள் பலவற்றை அதிமுக பார்த்துள்ளது. மூட்டைப்பூச்சிகள் நசுக்கி போடப்பட வேண்டியவை என்றும், கடத்தல்காரன் பில்லா ரங்கா நாட்டை ஆளக் கூடாது.

புரட்சித் தலைவரும், புரட்சித்தலைவியும் கட்டிக்கத்தை அதிமுகவை அழிக்க  ஸ்டாலினுடன் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார் தினகரன். இருவரும் பரஸ்பரம் பேசிக் கொள்கிறார்கள். 2ஜி வழக்கை முன்வைத்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தவர் மாண்பு மிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஆனால் 2ஜி வழக்கில் திமுகவினர் விடுதலை அடைந்ததை தினகரன் தரப்பு வரவேற்றது. இது அம்மா ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்வதைபோல இந்த செயல் உள்ளது. என கூறியுள்ளார். நேற்று முன்தினம் “ஆமைத் தலையர், காமெடியன்”  என தினகரன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தினகரனை மூட்டைப்பூச்சி என அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!