
மலேசிய நாட்டிற்குள் செல்ல வைகோவிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு மலேசிய நாட்டு தூதரை அழைத்து மத்திய அரசு சுமார் ஆறுமாதத்திற்கு பிறகு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜீன் மாதத்தில் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மலேசியா சென்ற மதிமுக பொதுசெயலாளர் வைகோவை ஆபத்தானவர் என்ற பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி அந்த நாட்டு அரசு அவரை மலேசிய நாட்டிற்குள் செல்ல தடை விதித்து திருப்பி அனுப்பியது.
விடுதலை புலிகள் அமைப்பை சார்ந்தவர் என கூறி, ஆபத்தானவர் என பட்டியலில் இருப்பதாக வைகோவை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து சுமார் 8 மணி நேரம் வைகோவை விமான நிலையத்திற்குள்ளேயே அமர வைத்து அடுத்த விமானத்தில் சென்னைக்கு அனுப்பினர்.
மலேசியாவில் சுமார் ஆறு மாதத்திற்கு முன்பு நடந்த இந்த செயல் குறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது , ஆனால் மத்திய அரசு சைலன்ட்டாக இருந்தது.
இந்நிலையில், திடீரென மத்திய அரசு மலேசிய தூதரை அழைத்து வைகோவை மலேசியாவிற்குள் செல்ல தடை விதித்தற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததை வைக்கோவே மறந்து அடுத்த வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆறு மாசத்துக்கு அப்புறம் தோண்டி எடுத்து மலேசிய தூதரை கண்டித்தது. வைகோவிற்கு ஐஸ் வைத்து திமுகவுடன் சேரப் பார்க்கிறதா பாஜக என்று அரசியல் கட்சிகள் குழம்பி வருகிறது.