தினகரனை புகழ்ந்து தள்ளும் அழகிரி... திமுகவை உடைக்க சதியா? தொண்டர்கள் கலக்கம்...

 
Published : Dec 27, 2017, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
தினகரனை புகழ்ந்து தள்ளும் அழகிரி... திமுகவை உடைக்க சதியா? தொண்டர்கள் கலக்கம்...

சுருக்கம்

AMK Azhagiri Support for Dinakaran Against Stalin

உதய சூரியன், இரட்டை இலை  சின்னம் மறந்து முப்பத்து மூன்றாவது இடத்தில் இருக்கும் குக்கருக்கு தேடி பிடித்து, வாக்களிக்கும் அளவிற்கு தினகரன் களப்பணி ஆற்றியுள்ளார் என  திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைதேர்தலில் பலம் வாய்ந்த எதிர்கட்சியும், உதயசூரியன் என்ற தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சயமான சின்னம், சுயேச்சை வேட்பாளரின் குக்கரிடம் படுதோல்வியை சந்தித்ததையடுத்து. திமுக  செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும், தினகரனின் தேர்தல் களப்பணி குறித்து கட்சியிலிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.க அழகிரி தனியார் தொலைகாட்சிக்கு இவர்களது செயல்பாடு குறித்து பேட்டியளித்துள்ளார்.

களப்பணி செய்தால்தான் தேர்தல்ல ஜெயிக்க முடியும்ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது எனவும், சுயேச்சை வேட்பாளரிடம் டெபாசிட் இழக்கிற அளவுக்கு திமுக இருக்கிறது எனில் ஸ்டாலின் செயல்பாடு எப்படி? ஆர்கே நகரில் திமுக டெபாசிட்டை இழந்துள்ளதே இதற்கு முக்கிய உதாரணம் என பகிரங்கமாக கூறியுள்ளார்.

மேலும், பேசிய அவர்... “தம்பி வா... தலைமை ஏற்க வா...” என ஒருவர் சொன்னால் மட்டும் வெற்றிபெற முடியாது. களத்தில் இரங்கி வேலை செய்யணும். களத்தில் இரங்கி வேலை செய்ததால் தான் தினகரனால் வெல்ல முடிந்தது.

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மேலே இருந்த உதயசூரியன், இரட்டை இலை உள்ளிட்ட சின்னங்களையெல்லாம் மறந்து விட்டு வாக்காளர்கள் தேடி பிடித்து முப்பத்து மூன்றாவது இடத்தில் இருக்கும்   குக்கரில் வாக்களித்துள்ளார்கள் என்றால் தினகரனின் களப்பணி சிறப்பாக இருந்துள்ளது என்றுதானே அர்த்தம் என தினகரனின் வெற்றிக்கு வாழ்த்து கூறுவதைப்போல தினகரனின் செயல்பாடு, களப்பணியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும், திமுக தொண்டர்களை உசுப்பேற்றும் விதமாக பேசியிருக்கும் அழகிரி துரோகிகள் புதிதாக வந்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்திவிட்டு உண்மையான திமுக தொண்டர்களுக்கு பதவியை வழங்கினால் திமுக வெல்ல முடியும் என கூறியுள்ளது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போகிற போக்கில், (“தம்பி வா... தலைமை ஏற்க வா... என ஸ்டாலினை முன்னிலை படுத்தியதற்காக, இப்படி அழகிரி திரி கிள்ளி விடுவதாக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு பேச்சு...”) திமுக தலைமை நிலைய செயலாளர் துரைமுருகினை தொண்டர்களிடம் கோர்த்து விடும் அளவிற்கு “திமுகவினரை பணத்துக்கு விலை போனதாக சொல்லலாமா?“ என கொளுத்திப் போட்டுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்