பிரசாரத்துக்கு போகாத நடிகை குஷ்பு... காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி காரணமா?

By Asianet TamilFirst Published Apr 4, 2019, 9:51 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரமுகர் நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரத்தில் இதுவரை ஈடுபடாமல் இருப்பது பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடிகை குஷ்பு, அக்கட்சியின் அகில் இந்திய செய்தி தொடர்பாளராக இருந்துவருகிறார். கடந்த 2014-ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதால், தேர்தலில் களம் இறங்க குஷ்பு விரும்பவில்லை. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதியைப் பெற்று போட்டியிட விரும்பினார். ஆனால், சென்னையில் அவர் எதிர்பார்த்த தொகுதி எதையும் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கவில்லை. இதனால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.
தற்போது நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் குஷ்பு ஆர்வம் காட்டினார். ஆனால், அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சியில் சேர்ந்தவுடனே நடிகை ஊர்மிளாவுக்கு சீட்டு கிடைத்ததாலும் அண்மையில் தமிழகத்தில் சேர்ந்த அப்சராவுக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் குஷ்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாக தேர்தல் பிரசாரத்தை குஷ்பு தவிர்க்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கட்சிகளின் சார்பில் வழங்கப்படும் நட்சத்திர பிரசாகர்கள் பட்டியலில் குஷ்பு பெயர் இடம்பெற்றும் இதுவரை எந்தத் தொகுதியிலும் குஷ்பு பிரசாரம் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலர் குஷ்புவை பிரசாரத்துக்கு அழைத்தும் அவர் வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் டி.வி.யில் வெளியாகும் ‘லட்சுமி ஸ்டோர்’ தொடரில் நடிப்பதில் மட்டுமே அவர் பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், குஷ்பு தேர்தல் பிரசாரத்துக்கு வருவாரா மாட்டாரா என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

click me!