ரஜினியை அரசியல் களத்திற்குள் இழுக்கும் கமல்..! சிக்குவாரா? தப்புவாரா?

Published : Apr 04, 2019, 09:47 AM ISTUpdated : Apr 04, 2019, 09:49 AM IST
ரஜினியை அரசியல் களத்திற்குள் இழுக்கும் கமல்..! சிக்குவாரா? தப்புவாரா?

சுருக்கம்

நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தன் மூலம் அவரை அரசியல் களத்திற்குள் கமல் இழுத்து விட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தன் மூலம் அவரை அரசியல் களத்திற்குள் கமல் இழுத்து விட்டுள்ளார்.

அப்பா நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. 40 தொகுதிகளுக்கும் டார்ச் லைட் சின்னத்தில் கமல் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஆனால் கமல் கட்சிக்கு என்று வலுவான கட்டமைப்பு இல்லை. இதனால் கமலின் பிரச்சாரத்திற்கு எப்படி ஆட்களை சேர்ப்பது என்று கூட தெரியாமல் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சிலர் திணறி வருகின்றனர்.

கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய கமல் அதே வேகத்தில் பிரசாரத்தை ஒத்தி வைத்தார். இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னையில் கடமைக்கு பிரச்சாரத்தை மேற்கொண்டார் கமல். வடசென்னையில் போட்டியிடும் கமல் கட்சியின் மவுரியா மத்திய சென்னையில் போட்டியிடும் கமீலா நாசர் ஆகியோரை ஆதரித்து கமல் மேற்கொண்ட பிரச்சாரம் வழக்கம்போல் பிசுபிசுத்துப் போனது.

இதற்கெல்லாம் காரணம் கமல் கட்சியில் தேர்தல் பணிகளை ரசிகர் மன்ற நிர்வாகிகளை அரசியல் கட்சியினரும் மேற்கொள்ளாதது தான். மாறாக கமலின் பிரச்சார ஏற்பாடுகளை அவரது pro டீம் கவனித்து வருகிறது. இதனால் தான் கமல் செல்லுமிடங்களிலெல்லாம் கூட்டம் கூடுவது இல்லை என்கிற ஒரு பேச்சும் அடிபடுகிறது. 

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் எனும் கடலில் இறங்கிய பிறகு எந்தத் தொகுதியிலும் கமல் கட்சிகள் டெபாசிட் கூட தேறாது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால்தான் திடீரென ரஜினி தனக்கு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்து வெளிப்படையாக பேட்டி கொடுத்துள்ளார் கமல். 

அதுவும் தனது கட்சி அலுவலகத்திற்கு ரஜினி வந்தபோது தான் வெளிப்படையாக ஆதரவு கேட்டதாகவும் அது குறித்து பரிசீலிப்பதாக ரஜினி கூறிச் சென்றதாக கமல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கமல் கட்சிக்கு ஆதரவா இல்லையா என்று ரஜினி தெரிவிக்க வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் ஆட்டத்திற்கு கமல் ரஜினியை இழுத்து விட அதற்கு ரஜினி என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..