கட்டு கட்டாக சிக்கும் திமுக கூட்டணி பணம்..! காசுக்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுக்கும் உடன் பிறப்புகள்..!

By Selva KathirFirst Published Apr 4, 2019, 9:36 AM IST
Highlights

திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்புடைய பணம் அடுத்தடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இடம் சிக்கும் விவகாரத்தில் உடன்பிறப்புகளின் துரோகம் தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது.

திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் தொடர்புடைய பணம் அடுத்தடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இடம் சிக்கும் விவகாரத்தில் உடன்பிறப்புகளின் துரோகம் தான் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது.

இந்த வாரத் துவக்கத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் 11 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமான வரித்துறை கைப்பற்றியது. இந்த நிலையில் பெரம்பலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் இடம் சிக்கியது. இந்த இரண்டு கோடி ரூபாய் பணம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிக்கு கொண்டு செல்லும் போதுதான் பிடிபட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

இதேபோல் காட்பாடியில் சிக்கிய பணமும் கூட வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த பணம் தான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பணம் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. இந்தப் பணமும் கூட திமுகவினர் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

இப்படி தொடர்ந்து திமுக தொடர்புடையவர்கள் பணம் மட்டும் சிக்கி அதன் பின்னணியில் வருமானவரித் துறையின் மிக நுட்பமான ஒரு தந்திரம் இருப்பதாக சொல்கிறார்கள். தேர்தல் செலவுக்காக வேட்பாளர்களும் அரசியல் கட்சியினரும் பதுக்கி வைத்துள்ள பணம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கம் என்று வருமான வரித்துறை ரகசியமாக தகவல்களை பரப்பி வருவதாக கூறுகிறார்கள்.

அதிலும் வேட்பாளர்களுக்கு நெருக்கமான மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள சிலரைக் குறிவைத்து இந்த தகவல்களை போலீசார் கொண்டு சென்ற சேர்க்கின்றனர். ஐந்து லட்சம் ரூபாய் என்று நினைத்து வேட்பாளர்கள் பணத்தை எங்கு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிற தகவலை அவர்கள் தான் வருமான வரித்துறைக்கும் தேர்தல் பார்க்கும் படையினருக்கும் கசிய விடுவதாகவும் பேசிக்கொள்கிறார்கள். அந்த வகையில் காட்பாடி பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலையில் சிக்கிய பணத்திற்கு உடன்பிறப்புகள் கொடுத்த ரகசிய தகவல் தான் காரணம் என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

click me!