உளவுத்துறையின் லேட்டஸ்ட் ரிப்போர்ட் ! 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் ?

By Selvanayagam PFirst Published Apr 4, 2019, 9:46 AM IST
Highlights

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என தமிழக உளவுத் துறை மத்திய , மாநில அரசுகளுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத்துக்கு இடைத் தேர்லும் நடைபெறவுள்ளது.

இதில் திமுக தலையில் காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதே போல் அதிமுக கூட்டணியில்  பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என இரு அணிகளும் எதற்கும் தயாராக உள்ள நிலைதான் தற்போது நிலவுகிறது.

குறிப்பாக பணப்பட்டுவாடா செய்யும் வேலைகளில் திமுக மற்றும்  அதிமுக ஈடுபட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கட்டு கட்டாக பணம் அள்ளியது. பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.

ஆனால் வேலுார் மக்களவைத்  தொகுதி தேர்தலையும் இரண்டு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடக்கிறது என்றும் அதன் காரணமாக தான் இந்த சோதனை திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்றும் ஸ்டாலின்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் நடந்த 'ரெய்டு' விவகாரத்திற்கு பின் மத்திய உளவுத் துறை எடுத்துள்ள 'சர்வே' முடிவில் தி.மு.க.வுக்கு 18 மக்களவைத் தொகுதிகளும் அ.தி.மு.க.வுக்கு 13 தொகுதிகளும் அ.ம.மு.க.வுக்கு மூன்று தொகுதிகளும் கிடைக்கலாம்' என்றும் இழுபறியில் ஆறு தொகுதிகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் சோளிங்கர், குடியாத்தம், ஓசூர், பரமக்குடி, நிலக்கோட்டை ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும்; திருவாரூர், மானாமதுரை, பெரியகுளம், ஆண்டிப்பட்டி ஆகிய நான்கு தொகுதிகள் அ.ம.மு.க.விற்கு சாதகமாகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், ஆம்பூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி, தஞ்சாவூர், சாத்துார், விளாத்திகுளம் ஆகிய ஒன்பது தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியயுள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்துக்கிடையே எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவரசமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

click me!