அதிமுக கோட்டையாக இருந்து வந்த கொங்கு மண்டலத்தை தற்போது திமுக கோட்டையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றி வருவது அதிமுகவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அதிமுக கோட்டையாக இருந்து வந்த கொங்கு மண்டலத்தை தற்போது திமுக கோட்டையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றி வருவது அதிமுகவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு ஆலோசனைகள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு கோவை விமான நிலையம் வந்து அங்கிருந்து அரசினர் விருந்தினர் மாளிகை செல்லும் வழி வரை முதல்வர் ஸ்டாலினை வரவேற்க நிர்வாகிகள் பலரும் குவிந்து இருந்தனர். திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் அவரை சந்திக்க காத்து இருந்தனர். இதனால் அவரின் கார் 10 நிமிடத்தில் விருந்தினர் மாளிகைக்கு செல்வதற்கு பதிலாக கிட்டத்தட்ட 1 மணி நேரம் மக்கள் மத்தியில் மெதுவாக சென்றது.
இதையும் படிங்க: ஒன்றரை ஆண்டில் இத்தனை சாதனைகள்.. யோக்கியதை இருக்கா? எதிர்கட்சிகளை கிழித்த முதல்வர் ஸ்டாலின்!
அதேபோல் இன்றும் கோவையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு முதல்வர் ஸ்டாலினை வரவேற்க மக்கள் கூட்டம் குவிந்தது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள், தான் வரவேற்கப்பட்ட விதம் அனைத்தையும் பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. கடந்த முறை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை வந்த போதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பும் மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர். செந்தில் பாலாஜியின் முன்னெடுப்பில் தான் பலர் திமுகவில் இணைந்தனர். அதேபோல் இந்த முறையும் மாற்று கட்சியினர் சுமார் 50 ஆயிரம் பேர் இன்று திமுகவில் இணைந்தனர். இதில் ஆறுக்குட்டி உட்பட பெரும்பாலான உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள்.
இதையும் படிங்க: திமுகவில் மாற்று கட்சியினர் இணையும் விழா : முதல்வர் ஸ்டாலின் உரை - நேரலை !
இந்த சம்பவம் ஏற்கனவே உட்கட்சி பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் அதிமுகவிற்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக அமைந்தது. அதிமுகவின் கோட்டையாக விளங்கி கொங்கு மண்டலம் செந்தில் பாலாஜி வருகைக்கு பின் திமுகவின் கோட்டையாக செந்தில் பாலாஜி மாற்றி வருகிறார். கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் திமுகதான் மாபெரும் வெற்றிபெற்றது. இதற்கு செந்தில் பாலாஜியின் பணிகள் முக்கிய காரணமாக இருந்தன. அதேபோல்தான் இந்த முறையும் அதிமுகவின் கோட்டையை அசைத்து பார்க்கும் வகையில் மாற்று கட்சியினர் பலர் திமுகவில் இணைந்துள்ளனர். கொங்கு மண்டலத்தில் ஈபிஎஸ் பெரும் ஆதரவை பெற்றுள்ள நிலையில் தற்போது செந்தில் பாலாஜியும் கொங்கு மண்டலத்தில் அசத்தி வருகிறார். செந்தில் பாலாஜி இறங்கி ஆட ஆரம்பித்ததை அடுத்து ஈபிஎஸ் ஆட்டம் கண்டு போய் உள்ளார்.