
ஜெ "இட்லி" சாப்பிட்டத பார்த்த அமைச்சர்கள் யாரு...!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.மேலும் எங்களால் எந்த அளவிற்கு சிகிச்சை அளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சிகிச்சை அளித்து விட்டோம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்
அதாவது ஜெயலலிதா இட்லி சாபிட்டாரா இல்லையா என பட்டிமன்றமே வைக்கும் அளவிற்கு தமிழகம் முழுவதும் தற்போது விவாதம் சூடு பறக்கிறது
காரணம்,ஒவ்வொரு அமைச்சரும் மாறி மாறி கருத்து கூறி வருவதே. இதன் காரணமாகத்தான் தற்போதுஜெ மரணம் குறித்து விசாரிக்க தனி கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அபோல்லோ நிர்வாகம், ஜெ சிகிச்சையில் இருக்கும் போது அவரை பார்த்த அமைச்சர்கள் யார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் தராமல் நடையை கட்டியது.
அதாவது ஜெ வை பார்க்க, யாரெல்லாம் அனுமதிக்கப்பட்டனர் என்பதை விசாரணையின் போது தெரிவித்துக் கொள்கிறோம் என நைசாக நழுவியது அப்போலோ. இதன் காரணமாக அந்த இட்லியை யார் தான் சாப்பிட்டார் என சந்தேகம் வலுத்து வருகிறது